ETV Bharat / international

அமெரிக்க அதிபராகும் பைடன்? - கொதித்தெழும் 'அதிபர்' ட்ரம்ப்

author img

By

Published : Nov 7, 2020, 8:38 PM IST

வாஷிங்டன்: வாக்கு எண்ணிக்கை இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில் பைடன் எவ்வாறு தான் வெற்றிபெற்றதாக அறிவிக்கலாம் என்று அதிபர் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

Trump
Trump

அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெற்றுவருகிறது. பெரும்பான்மைக்கு 270 இடங்கள் தேவை என்ற நிலையில், பைடன் 234 இடங்களையும் ட்ரம்ப் 214 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது, பல இழுபறி மாகாணங்களில் ட்ரம்பே முன்னிலையில் இருந்தார். வாக்குப்பதிவு பாதிகூட நிறைவடையாத நிலையிலேயே, மீண்டும் வெற்றி பெற்றுவிட்டதாக ட்ரம்பே அறிவித்துக்கொண்டார்.

இந்தச் சூழலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட தொடங்கியதும் நிலைமை தலைகீழாக மாறியது. பல இழுபறி மாகாணங்களில் ட்ரம்பை பின்னுக்குத் தள்ளினார் பைடன். பென்சில்வேனியா, ஜார்ஜியா, நெவாடா உள்ளிட்ட மாகணங்களில் வெற்றிக்கனியை நெருங்கிவிட்டார்.

இந்நிலையில், ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "தவறாக ஜோ பைடன் அதிபர் பதவியை கோரக்கூடாது. என்னாலும் அவ்வாறு கோர முடியும். சட்ட நடவடிக்கைகள் இப்போது தொடங்குகின்றன" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தேர்தல் முடிவுகளை எதிர்த்து ட்ரம்ப் நீதிமன்றம் செல்லவுள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அதிபர் தேர்தல்: பிடன் கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறும் ட்ரம்ப் !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.