ETV Bharat / international

‘கரோனா தடுப்பூசி வழங்குவதில் தனது குழு முழுவதும் செயல்படும்’ - ஜோ பைடன்

வாஷிங்டன்: கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடுவதற்கான திட்டத்தில் தனது குழு முழுவதும் செயல்படும் என அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Biden says his team working on plan to get him publicly vaccinated against COVID

author img

By

Published : Dec 17, 2020, 11:50 AM IST

அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடன் நேற்று (டிச. 16) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஜோ பைடனின் குழு

அப்போது, செய்தியாளர்கள், எப்போது அனைத்து அமெரிக்கர்களுக்கு கரோனா தடுப்பூசி கிடைக்கும் எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜோ பைடன், “நாங்கள் இப்போது அதை நடைமுறைப்படுத்திவருகிறோம்.

தடுப்பூசி அனைத்து அமெரிக்க மக்களுக்கும் போய்ச்சேரும் வகையில் இருக்கும். அதுமட்டுமின்றி மக்கள் பாதுகாப்புடன் இதனைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தத் தடுப்பூசியைப் பாதுகாப்பான முறையில் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வண்ணம் செய்வதற்கு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான முயற்சியில் அந்தக் குழு செயல்பட்டுவருகிறது” என்றார்.

பயன்பாட்டில் தடுப்பூசி

அமெரிக்காவில் ஃபைசர் கரோனா தடுப்பூசி அவசரக் காலப் பயன்பாடாக கடந்த 15ஆம் தேதிமுதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்குச் செலுத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...சர்வதேச கோவிட்-19 நிலவரம்: அமெரிக்காவில் ஒரே நாளில் மூன்று லட்சம் பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.