நஃப்டாலி பென்னட் இஸ்ரேல் பிரதமராகப் பதவியேற்றபின் முதல்முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசத் திட்டமிட்டிருந்தார்.
நேற்று இந்தச் சந்திப்பு நடைபெறுவதாக இருந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் அமெரிக்கப் படையினர் 13 பேர் உயிரிழந்தனர்.
இரு தலைவர்கள் சந்திப்பு ரத்து
இந்த குண்டுவெடிப்பு காரணமாக இஸ்ரேல் பிரதமருடனான சந்திப்பை அமெரிக்க அதிபர் ஒத்திவைத்தார். அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பெண்டகனுடன் அதிபர் ஜோ பைடன் தொடர்ந்து ஆலோசனையில் இருந்தார்.
ஆப்கன் நிலவரத்தை ஜோ பைடன் தொடர்ந்து கண்காணித்துவருவதால், இஸ்ரேல் அதிபருடனான சந்திப்பு நடைபெறுவது சந்தேகமே என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரு தலைவர்களும் திட்டமிட்டிருந்த சந்திப்பில் பிராந்திய, சர்வதேச பாதுகாப்பு, ஈரான் மற்றும் பாலிஸ்தீன நாடுகளின் உறவு குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: உங்களை வேட்டையாடுவோம் - பயங்கரவாதிகளுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை