ETV Bharat / international

பைடன் அடித்த ஜோக்; சிரிப்பு மாளிகையாக மாறிய வெள்ளை மாளிகை! - BIDEN

பைடன், மோடி கூட்டாக செய்தியாளரை சந்தித்தபோது, பைடன் கூறிய நகைச்சுவை மோடி, செய்தியாளர்கள் உள்பட அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்திய சுவாரஸ்ய நிகழ்வு நடைபெற்றுள்ளது.

MODI, BIDEN, பைடன், மோடி
பைடன் அடித்த ஜோக்
author img

By

Published : Sep 25, 2021, 7:22 PM IST

வாஷிங்டன்: அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார்.

கரோனா பெருந்தொற்று, ஆப்கானிஸ்தான் விவகாரம் உள்ளிடவை பற்றி இருவரும் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளரை சந்தித்தனர்.

ஐந்து பைடன்கள்

அந்தச் செய்தியாளரின் சந்திப்பின்போது ஜோ பைடன், மோடியிடம் கூறிய நகைச்சுவையால், அந்த அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. அப்போது, இந்தியாவுக்கும் அவருக்கும் இருந்த உறவு குறித்து பைடன் பேசினார். 2013ஆம் ஆண்டு துணை அதிபராக இருந்தபோது, மும்பைக்கு வந்ததை நினைவுகூர்ந்தார்.

"2013ஆம் ஆண்டு மும்பையில் செய்தியாளர் என்னிடம், இந்தியாவில் தங்களுக்கு உறவினர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று கேள்வியெழுப்பினர். அதற்கு நான், 'எனக்கு இந்தியாவில் உறவினர்கள் யாரும் இருக்கிறார்களா என்பது எனக்கு தெரியாது.

ஆனால், 1972ஆம் ஆண்டு, எனது 29ஆவது வயதில் செனட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, மும்பையில் இருந்து பைடன் என்ற துணைப்பெயரில் எனக்கு வாழ்த்துக் கடிதம் வந்தது.

MODI, BIDEN, பைடன், மோடி
கைக்குலுக்கும் மோடி - பைடன்

ஆனால், அந்த கடிதத்தை அனுப்பியது யார் என்று என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை' என்று அவர்களுக்கு பதிலளித்தேன். மறுநாள் காலையில், பைடன் என்ற பெயரில் இந்தியாவில் மொத்தம் ஐந்து பேர் உள்ளதாக செய்தியாளர் என்னிடம் தெரிவித்தனர்" என்றார்.

மோடிதான் கண்டுபிடிக்க வேண்டும்

இதை கூறியவாரே மோடியை நோக்கி நகைக்கும் தொனியில், "கிழக்கிந்திய தேயிலை கம்பெனியின் கேப்டனாக ஜார்ஜ் பைடன் என்பவர் இருந்துள்ளார். அயர்லாந்தைச் சேர்ந்தவனான எனக்கு இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், இதை தற்செயல் என்றும் நினைத்துவிடக்கூடாது. இதன்பின்னே இருக்கும் நகைச்சுவையை நீங்கள் புரிந்துக் கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

MODI, BIDEN, பைடன், மோடி
செய்தியாளர் சந்திப்பில் மோடி - பைடன்

ஜார்ஜ் பைடன் இந்திய பெண் ஒருவரை மணந்துகொண்டு, இந்தியாவிலேயே தங்கிவிட்டார் எனக் கேள்விப்பட்டேன். ஆனால், என்னால் அதை பின் தொடர முடியவில்லை. அதனால், இந்தச் சந்திப்பின் முழு நோக்கமும் அவரை கண்டுபிடிப்பதுதான்" எனச் சொல்லி முடிக்க மோடி உள்பட அரங்கத்தில் இருந்த அனைவருக்கும் தங்களின் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

பின்னர், பைடனின் இந்த நகைச்சுவைக்கு மெல்லிய புன்னகையுடன் பதிலளித்த மோடி, "இதுகுறித்து, நீங்கள் முன்பே என்னிடம் கூறியிருந்தீர்கள். அதனால்தான், இத்தனை கோப்புகள், ஆவணங்களுடன் நான் வந்திருக்கிறேன். அவரை கண்டிபிடிக்க இந்த ஆவணங்களில் சில உங்களுக்கு உபயோகப்படும்" என்றார்.

இரு சர்வதேச தலைவர்களும், ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இப்படி நகைச்சுவை ததும்ப உரையாடியது பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ஜோ பைடனின் முன்னோர்கள் சென்னையில் வசித்தார்களா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.