ETV Bharat / international

பைடனின் ஆலோசகருக்கு கரோனா உறுதி - செட்ரிக் ரிச்மண்ட்

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவரான செட்ரிக் ரிச்மண்ட்டிற்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Biden adviser Cedric Richmond tests positive for Covid-19

author img

By

Published : Dec 18, 2020, 2:10 PM IST

வாஷிங்டன்: தற்போது அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன். இவருக்குத் தேர்தலில் உதவ ஆலோசகர்கள் பலர் செயல்பட்டுவந்தனர். அவர்களில் ஒருவர் செட்ரிக் ரிச்மண்ட். இவர் தற்போது கரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

47 வயதான இவர் கடந்த மாதம் தேர்தல் பணிக்காக ஜோ பைடனின் வீட்டிற்கு அருகில் குடியேறியது குறிப்பிடத்தக்கது.

காங்கிரசின் பிளாக் காகஸ் உறுப்பினர்களுடான உறவுகளை பைடன் தொடர்வதற்கு உதவிய இவர் நேற்று (டிச. 17) கரோனா நோய்க்கான அறிகுறிகளை உணர்ந்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து, கரோனா பரிசோதனை மேற்கொண்ட அவர், தான் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்தார்.

இதையும் படிங்க: 'வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற மாட்டேன்' - அடம்பிடிக்கும் ட்ரம்ப்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.