செப்டம்பர் 30ஆம் தேதியோடு இந்த ஆண்டுக்கான நிதி நிறைவடைய இருப்பதால் அரசு பணிநிறுத்ததை அறிவிக்க ஜோ பைடன் அரசு திட்டமிட்டுள்ளது என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சகி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜென் சகி, நிதி மேலாண்மை அலுவலகம் அரசு பணிநிறுத்தத்தை முறையாக செய்ய திட்டமிட்டுள்ளது. இன்னும் 7 நாட்களுக்குள் இதற்கான திட்டமிடுதலை செய்ய இருக்கிறோம். கரோனா சூழலில் இந்த அரசு பணிநிறுத்தம் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியும்; பொருளாதார மீட்டெடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள பைடன் அரசு திட்டமிட்டுள்ளது.
அரசு பணிநிறுத்தத்தால் அதிக செலவாகும், பாதிப்பு இருக்கும். நேரடி மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் மட்டும் இயங்கும்; அதற்கு மட்டும் விலக்கு உண்டு என்றார்.
டிசம்பர் 2022-க்குள் அரசு கடன்களை முடிக்க வேண்டும் என வெள்ளை மாளிகையின் பிரதிநிதிகள் சட்டம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து ஜென் சகி இவ்வாறு பேசியுள்ளார்.
இதையும் படிங்க: நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு - டெல்லியில் பரபரப்பு