ETV Bharat / international

இந்திய வம்சாவளி சமையல்காரரை மணந்த ஆஸ்திரிய இளவரசி உயிரிழப்பு! - டெக்சாஸ் மாகாணம்

டெக்சாஸ்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமையல்காரர் ரிஷி ரூப் சிங்கை மணந்த ஆஸ்திரியா இளவரசி மரியா கலிட்சின் 31 வயதில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

டெக்சாஸ்
டெக்சாஸ்
author img

By

Published : May 16, 2020, 12:29 AM IST

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரை சேர்ந்த ஆஸ்திரியா இளவரசி மரியா கலிட்சின், 31 வயதில் cardiac aneurysm என்னும் பிரச்னை காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்த சமையல்காரர் ரிஷி ரூப் சிங்கை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு மாக்சிம் என்கிற இரண்டு வயது ஆண் குழந்தை உள்ளது. இளவரசி மரியா, ஹூஸ்டனில் இன்டீரியர் டிசைனராக பணியாற்றி வந்துள்ளார். இவரது கணவர் ரிஷியும் ஹூஸ்டனில் மிகப்பெரிய செஃபாக வலம் வந்துள்ளார்.

கடந்த மே நான்காம் தேதி உயிரிழந்த இளவரசி மரியா, ஹூஸ்டனில் உள்ள ஃபாரஸ்ட் பார்க் வெஸ்தெய்மெர் கல்லறையில் (Forest Park Westheimer Cemetery) அடக்கம் செய்யப்பட்டார். 1988 ஆம் ஆண்டு லுக்சம்பெர்கில் பிறந்த மரியா, 5 வயதில் ரஷ்யாவுக்குச் சென்றார். பெல்ஜியத்தில் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தார். இதையடுத்து, புருசெல்ஸ், சிக்காகோ, இலினோய், ஹூஸ்டன் ஆகிய பகுதிகளில் அவர் பணியாற்றியுள்ளார்.

இதையும் படிங்க: 3 நிமிட வீடியோ காலில் 3,700 பேரை வேலையை விட்டுத் தூக்கிய ஊபர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.