அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண தலைநகர் அட்லான்டாவில் ரேஷர்ட் ப்ரூக் (27) என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் மீது அந்நகர காவல் துறை அலுவலர் கடந்த வெள்ளி இரவு தூப்க்கிச் சூடு நடத்தியுள்ளார்.
வென்டீஸ் என்ற பிரபல ஃபாஸ்ட் ஃபுட் உணவகம் எதிரே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ப்ரூக் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏற்கனவே, மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் (46) என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் காவல் துறை பிடியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவையே உலுக்கிவரும் வேளையில், அட்லான்டாவில் நடந்த இந்த சம்பவம் அமெரிக்கர்கள் மத்தியில் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ரேஷர்ட் ப்ரூக்கின் உடலை உடற்கூறாய்வு செய்த மருத்துவ பரிசோதகர், "ப்ரூக்கின் முதுகில் இரண்டு முறை சுடப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ரத்த இழப்பிலேயே அவர் உயிரிழந்தார். இதனைக் கொலையாகவே நாம் கருத வேண்டும்" என உடற்கூறாய்வு அறிக்கையில் கூறியுள்ளார்.
துப்பாக்கிச்சூடு சம்பத்துக்குப் பொறுப்பேற்று அட்லான்டா காவல் துறை தலைவர் எரிக்கா ஷீல்ட்ஸ் பதவி விலகிய நிலையில், ப்ரூக்கை சுட்டுக் கொன்ற காவல் துறை அலுவலர் கேரட் ரால்ஃப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க : அட்லான்டாவில் ஆப்ரிக்க அமெரிக்கர் சுட்டுக்கொலை: காவல் துறை தலைவர் ரிசைன்!