கொலம்பியாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக கடந்த மூன்று நாட்களாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, வெள்ளிக்கிழமை இரவு (உள்ளூர் நேரப்படி) கொலம்பியாவின் சான்தன்தெர் தெ கிலிசாவ் (Santander de Quilichao) நகரில் உள்ள காவல் நிலையம் அருகே வெடிகுண்டு பொறுத்தப்பட்ட காரை அடையாளம் தெரியாத நபர்கள் வெடிக்கச் செய்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு அருகே நின்றுகொண்டிருந்த மூன்று பேர் பரிதாபமாக பலியாயினர். மேலும், காவல் துறையினர் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு எந்த பயங்கரவாத அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை.
இதையும் படிங்க: ஈகுவடார், பொலிவியாவைத் தொடர்ந்து கொலம்பியாவிலும் போராட்டம்!