டொன்ல்டு ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற பின்பு, பிறநாட்டவருக்கு விசா வழங்குவதில் அமெரிக்க அரசு பல்வேறு கெடுபிடிகளை விதித்துவருகிறது. இந்நிலையில், விசா வழங்குவதை மேலும் கடுமையாக்கும் விதமாக, விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்களது சமூக வலைதள விபரங்களை சமர்பிக்க வேண்டும் என்னும் புதிய விதிமுறையை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் கொண்டுவந்துள்ளது.
அதன்படி, விண்ணப்பதாரர்கள் கடந்த 5 ஆண்டுகளின் தங்களது சமூக வலைத்தள செயல்பாட்டு தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். இதுதவிர, 5 ஆண்டுகால மின்னஞ்சல், செல்போன் விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அமெரிக்கக் குடிமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த புதிய விதிமுறையானது கொண்டுவரப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
முன்னதாக, பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நாடுகளை சேர்ந்த நபர்களுக்கு மட்டுமே இந்த விதிமுறையை பின்பற்ற வேண்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.