ETV Bharat / international

காஷ்மீர் பிரச்னையை தீர்க்க முன்வரும் அமெரிக்கா! - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

நியூயார்க்: காஷ்மீர் பிரச்னையை தீர்க்க அமெரிக்க முன்வரும் என அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Trump
author img

By

Published : Sep 23, 2019, 11:57 PM IST

காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவிவருகிறது. இரு நாடுகளையும் அமைதி காக்கும்படி உலக நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளன. ஒருபடி மேலே சென்ற அமெரிக்கா இந்த விவகாரத்தை தீர்க்க மத்தியஸ்தராக செயல்பட தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஐநா கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்கா சென்றுள்ளார். இதனிடையே அந்நாட்டு அதிபர் ட்ரம்பை அவர் சந்தித்து பேசினார். அப்போது ட்ரம்ப், "காஷ்மீர் பிரச்னையை தீர்க்க நான் தயாராக உள்ளேன். அது மிகவும் சிக்கலான விவகாரம். பல காலமாக அந்த பிரச்னை நீண்டுகொண்டே செல்கிறது. இரு நாடுகள் விரும்பினால் மத்தியஸ்தராக செயல்படுகிறேன்" என்றார்.

முன்னதாக, இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் பேச உள்ளேன் என இம்ரான் கான் தெரிவித்திருந்தார்.

Intro:Body:

new

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.