ETV Bharat / international

தன் குழந்தை போலவே முதலையை தோளில் சுமந்து சென்ற வனத் துறை அலுவலர்! - crocodile lift by forest officer

வாஷிங்டன்: வீட்டு நீச்சல்குளத்திலிருந்து வெளியே செல்ல முடியாத 9 அடி முதலையை வனத்துறை அலுவலர் தோளில் சுமந்து நடந்து சென்று அசத்தியுள்ளார்.

வனத்துறை அலுவலர்
author img

By

Published : Oct 18, 2019, 8:29 PM IST

புளோரிடா மாகாணத்தில் வீட்டின் ஒன்றில் 9 அடி நீளமுள்ள முதலை ஒன்று புகுந்துள்ளது. வீட்டில் உள்ள நீச்சல்குளத்தில் இறங்கிய முதலை வெளியே வரமுடியாமல் நீண்ட நேரமாகத் தவித்து சுற்றிவந்துள்ளது. இதனைப் பார்த்த வீட்டின் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தகவலறிந்து வனத் துறை அலுவலர் பால் பெடார்ட் (Paul Bedard) உடனடியாக வீட்டிற்கு விரைந்து வந்துள்ளார்.

ஆனால் வனவிலங்குகளை விரட்டுவதில் வல்லவரான பால் பெடார்டுக்கு நீருக்குள் முதலை இருந்ததால் பிடிப்பதற்கு சிரமமாக இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து முதலை சோர்வாகும்வரை காத்திருந்து நீருக்குள் பயமின்றி துணிச்சலுடன் இறங்கியுள்ளார். முதலையின் வாயை பிளாஸ்டிக் டேப்பினால் இருக்கமாகக் கட்டிவிட்டு தோளில் வைத்து தூக்கி வெளியே கொண்டுவந்துள்ளார்.

அதன்பின் முதலை பத்திரமாக வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தின் புகைப்படங்களை பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.