உலக பொருளாதார மன்றம் (WEF) வெளியிட்டுள்ள அறிக்கையில், " இயந்திரங்கள், செயற்கை நுண்ணறிவுகள் பயன்பாடு அதிகரிப்பதால் 10 பேரில் 6 பேராவது 2025க்குள் வேலை இழக்க நேரிடும் என்பது தெரியவந்துள்ளது. இதற்காக, 19 நாடுகளில் 32 ஆயிரம் தொழிலாளர்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதில், கிட்டத்தட்ட 40 விழுக்காடு தொழிலாளர்கள் ஐந்து ஆண்டுகளில் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்றும், 56 விழுக்காடு பேருக்கு எதிர்காலத்தில் குறைவான வேலைவாய்ப்புதான் இருக்கும் என்றும், 60 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தங்கள் வேலைகளைப் பாதுகாக்க அரசு முயற்சி செய்ய வேண்டும்" எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோல, 2020ஆம் ஆண்டில் 40 விழுக்காடு தொழிலாளர்கள் தங்களது டிஜிட்டல் திறன்களை வளர்த்துக்கொள்ள திட்டமிட்டிருப்பதும், 77 விழுக்காடு நபர்கள் புதிய திறன்களைக் கற்க தயாராக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 85 மில்லியன் வேலைவாய்ப்புகள் பறிபோக வாய்ப்புள்ளதாகவும் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 93,000 கரோனா பாதிப்பு: பிரதமர் மோடி அவசர ஆலோசனை