ETV Bharat / international

கரோனா வைரஸை எதிர்க்கும் பெல்ஜிய லாமா விலங்குகள்! - கரோனா வைரஸ், கோவிட்-19 பெருந்தொற்று, பாதிப்பு, பெல்ஜியன் லாமா விலங்குகள்

வாஷிங்டன்: பெல்ஜியத்தின் குளிர்கால உயிரி ஆராய்ச்சி பண்ணையில் சுமார் 130 லாமாக்கள் மற்றும் அல்பாக்காக்கள் வாழ்கிறது. இவை கரோனா வைரஸின் மேற்பரப்பைக் கவரும் ஸ்பைக்கி புரதங்களை பிணைக்க உதவும் ஒரு சிறப்பு வகை நோயெதிர்ப்பு ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது.

Belgian llama  Coronavirus antibody  COVID-19 pandemic  Coronavirus vaccine  கரோனா வைரஸை எதிர்க்கும் பெல்ஜியன் லாமா விலங்குகள்  பிலாஸ்மா தெரபி சிகிச்சை  கரோனா வைரஸ், கோவிட்-19 பெருந்தொற்று, பாதிப்பு, பெல்ஜியன் லாமா விலங்குகள்  சார்ஸ், மெர்ஸ் வைரஸ் நோய்கள்

author img

By

Published : May 8, 2020, 6:56 PM IST

கரோனா வைரஸிற்கு எதிராக ஒரு பயனுள்ள சிகிச்சை முறையை கண்டுபிடிக்க உலக இனம் ஒரு தனிப்பட்ட நிலைப்பாட்டிற்கு வந்துவிட்டது. இந்நிலையில் வின்டர் என்று பெயரிடப்பட்ட நான்கு வயது லாமாவின் (ஒட்டக வகையைச் சேர்ந்த சுமை தாங்கிச் செல்லும் மிருகம்), ஆன்டிபாடிகள் கோவிட்-19யை ஏற்படுத்தும் புதிய வைரஸ்களை நடுநிலையாக்குவதில் பயனுள்ளதாக இருக்கும் என்று ஒரு ஆய்வக சோதனைகளில் தெரியவந்துள்ளது.
வின்டர் பெல்ஜியத்தில் உள்ள ஒரு ஆராய்ச்சி பண்ணையில் சுமார் 130 லாமாக்கள் மற்றும் அல்பாக்காக்களுடன் (ஒட்டக இனத்தைச் சார்ந்த ஒரு வகை விலங்கு) வாழ்கிறது. இவை மற்றவிலங்குளைப் போலவே, புதிய கரோனா வைரஸின் மேற்பரப்பைக் கவரும் ஸ்பைக்கி புரதங்களை பிணைக்க உதவும் ஒரு சிறப்பு வகை நோயெதிர்ப்பு ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது.

இதன் மூலம் அது வைரஸின் விளைவை நடுநிலைப்டுத்துகிறது என்று வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செவ்வாயன்று (07-05-2020) வெளியிட்ட செய்தியில், ஆய்வறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளது. இந்த ஆய்வு தொடக்க நிலையில் இருந்தாலும், கரோனா வைரஸால் ஏற்படும் நோயை குணப்படுத்தும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Belgian llama  Coronavirus antibody  COVID-19 pandemic  Coronavirus vaccine  கரோனா வைரஸை எதிர்க்கும் பெல்ஜியன் லாமா விலங்குகள்  பிலாஸ்மா தெரபி சிகிச்சை  கரோனா வைரஸ், கோவிட்-19 பெருந்தொற்று, பாதிப்பு, பெல்ஜியன் லாமா விலங்குகள்  சார்ஸ், மெர்ஸ் வைரஸ் நோய்கள்
வைரஸ் ஆய்வு

வின்டர் சாக்லேட் வண்ணத்தில் இருக்கும், நீண்ட கால்கள், சற்று சாய்ந்த காதுகள் மற்றும் அழகான கண்களை கொண்ட பெண் லாமா ஆகும். இதன் ஆன்டிபாடிகள் நானோ பாடிஸ் என்று அழைக்கப்படும் ஒரு முக்கிய வகை. அமெரிக்காவின், ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகம், தேசிய சுகாதார நிறுவனங்கள் மற்றும் பெல்ஜியத்தில் உள்ள ஏஜென்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் தற்போது ஆய்வக எலிகளை கரோனா வைரஸ் ஸ்பைக் புரதத்திற்கு உட்படுத்துகின்றனர்.

பாரம்பரிய ஆன்டிபாடி மருந்துகளை அடையாளம் காண கோவிட்-19 இல் இருந்து மீண்ட மக்களின் ரத்தத்தை ஆய்வு செய்கின்றனர். 2016 ஆம் ஆண்டில், கரோனா வைரஸ்களுக்கான உலகளாவிய தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, மெர்ஸ் மற்றும் கரோனா வைரஸ் ஆகியவற்றிற்கு நோய்த்தடுப்பு மருந்து கிடைத்தது.

இது குறித்து டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வின் இணை ஆசிரியரும் பட்டதாரி மாணவருமான டேனியல் ரேப் கூறுகையில், “அவர்கள் அதன் ரத்தத்தை எடுத்து ஆன்டிபாடிகளை தனிமைப்படுத்தினர். அவற்றில் ஒன்று மெர்ஸ் கரோனா வைரஸை (MERS-CoV) நடுநிலையாக்குவதற்கான திறனைக் காட்டியது. கரோனா வைரஸூக்கு எதிராக போராட்டத்தில் ஒரு முழுமையான தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்து கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தோம்.

ஆனால், 'ஆறுதல் பரிசாக' மெர்ஸ் (MERS) மற்றும் சார்ஸ் (SARS)க்கு எதிராக சிறிய ஆன்டிபாடிகள் கிடைத்தது. இது பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு பயனளித்தது. இதையடுத்து இந்த மருந்து ஊசி மூலமாக அளிக்கப்பட்டது” என்றார். மேலும், “இந்த மருந்துகளை பெரிய மோனோக்ளோனல் ஆன்டிபாடி ஊசிகள் வாயிலாகவே பயனாளர்களுக்கு செலுத்த வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

கரோனா வைரஸூக்கு நெருங்கிய கூட்டாளிகளான மற்ற தொற்று நோய்களுக்கு நோயெதிர்ப்பு மருந்துகள் உருவாக்கியவர்களுள் ஒருவர் டானா ஃபார்பர். தற்போதைய கரோனா பாதிப்பு சிகிச்சைகள் குறித்து அவர் கூறுகையில், “இந்த அணுகுமுறை ஒரு மாற்றாக இருத்தல் வேண்டும். வைரஸூக்கு சிகிச்சையளிக்க வலிமையான மருந்துகள் அவசியம்.

ஆன்டிபாடிகள் சிகிச்சை

இதில், குறிப்பாக லாமாக்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நோயெதிர்ப்பு புரதங்கள் வைரஸூக்கு எதிரான போராட்டத்தில் வெற்றியை கொடுக்கலாம்” என்றார். “இந்த பரிசோதனைகள் எலிகள் உள்ளிட்ட விலங்களினங்கள் மீது நடைபெற்றுவருகிறது. மனிதர்கள் மீது சோதிக்கும் காலம் வெகுதொலைவில் உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், அமெரிக்க மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கோவிட்-19 பெருந்தொற்று நோயிலிருந்து உயிர் பிழைத்தவர்களின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து நோயெதிர்ப்பு சக்திகளை உருவாக்குகின்றனர். இது கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்தவர்களிடமிருந்து ரத்த பிளாஸ்மா பரிசோதனை பரிமாற்றங்கள் இயற்கையாக நிகழும் ஆன்டிபாடிகளை வழங்குவதன் மூலம் பயன்படுத்துகின்றன.

உலகளவில் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளும் ஒரு புறம் நடந்துகொண்டு இருக்கிறது. இதற்கு மத்தியில் உலகளாவிய நிபுணர்களின் பார்வையில், நோயெதிர்ப்பு சக்தி உருவாக்கம் என்னும் ஆன்டிபாடி சிகிச்சைகள் மிகவும் நம்பிக்கைக்குரிய ஆயுதங்களில் ஒன்றாக மாறிவிட்டன.

இதையும் படிங்க: கோவிட்-நெருக்கடி: பேராபத்தில் இந்திய காசநோயாளிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.