உலகம் முழுவதுமுள்ள நாடுகள் கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொண்டுவரும் நிலையில், டெக்சாஸ் மாகாணம் மேலும் ஒரு பாதிப்பை சந்தித்தது.
அட்லாண்டிக் கடலில் ஹன்னா எனப் பெயரிடப்பட்ட புயல் உருவானது. இந்த புயலால் உருவான மழை மற்றும் சூறாவளிக் காற்றால் கார்பஸ் கிறிஸ்டி பகுதியில் பயங்கரமான நிலச்சரிவினை ஏற்படுத்தியது.
மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றால் கிழக்கு கெண்டி கவுண்ட்டி பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது.
நேற்றைய நிலவரப்படி, 137 கி.மீ வேகத்தில் புயல் சற்று பலவீனமடைந்து, கரையைக் கடந்தது. புயலால் ஏற்பட்ட பாதிப்பினை சீராக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.