மேரிலாந்து மாகாணத்தின் கென்ட் தீவில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. உள்ளூர் நேரப்படி மதியம் 12.30 மணிக்கு நடைபெற்ற இந்த விபத்தில் சார்லஸ் நைட் (38) என்ற விமானியும், மேட் கிளார்க் (36) என்ற பயணியும் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கென்ட் தீவில் அமெரிக்கா கடலோரக் காவல்படை அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இது தொடர்பாக அலுவலர் ஒருவர் கூறுகையில், ஹெலிகாப்டரின் மிகப்பெரிய பாகம் ஒன்றை கண்டறியப்பட்டுள்ளது. அது தொடர்பாக தீவிர சோதனையை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.