கனடாவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று அதிகாலை அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 19 பேர் வெற்றிபெற்றுள்ளனர். அவர்களில் 18 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சியிலிருந்து 13 பேரும் கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து நான்கு பேரும் வெற்றிபெற்றுள்ளனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங்கின் ஜனநாயகக் கட்சியிலிருந்து அவர் மட்டுமே வெற்றிபெற்றுள்ளார்.
மொத்தம் 338 இடங்களைக் கொண்ட கனடா நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களையும் கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களை பிளாக் கியூபாகோயிஸ் கட்சி 32 இடங்களையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சி 24 இடங்களையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பெரும்பான்மைக்குத் தேவையான 170 இடங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை என்றாலும் புதிய ஜனநாயகக் கட்சியுடன் (24) கூட்டணி வைத்து ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் ஆட்சியை அமைப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மைனாரிட்டி ஆட்சியை அமைத்த ஜஸ்டின் ட்ரூடோ!