அர்ஜெண்டினாவில் வசித்து வரும் 28 வயது இளம்பெண் பெரட்டானி கடந்த 2017ஆம் ஆண்டு ஃபெர்னாண்டஸ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். அவர் பெரட்டானியுடன் தனிமையிலிருந்த காட்சிகளை ரகசியமாக வீடியோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.
இச்சம்பவத்தை அறிந்த பெரட்டானி தன்னை அசிங்கப்படுத்திய ஃபெர்னாண்டஸைப் பழிவாங்க வேண்டும் என முடிவெடுத்தார். அதன் பின்னர் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனியாகப் பேச வேண்டும் எனக் கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அப்போது பெர்னாண்டஸூடன் நெருக்கமாக இருக்கும் சமயத்தில் திடீரென்று மறைத்து வைத்திருந்த கட்டிங் பிளேடை கொண்டு காதலனின் ஆண்குறியை வெட்டி வீசியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பெர்னாண்டஸ் மிகப்பெரிய அதிர்ச்சியில் உறைந்தார்.
அவர் அலறும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அவர் கோமா நிலையை அடைந்துவிட்டார். இதனையடுத்து காவல் துறையினரிடம் அப்பெண், தன்னுடைய பாதுகாப்புக்காகவே வெட்டினேன் என கூறினார்.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணையின் இறுதியில் பெரட்டானி தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனால் அர்ஜெண்டினா நீதிமன்றம் பெரட்டானிக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது.