அமெரிக்காவில் டெக்சாஸ் மாகானத்தில் வசித்து வருகிறார் 10 வயது சிறுமி லில்லி மே அவண்ட். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் ஆற்றுப்படுகைக்குக் குளிக்கச் சென்றுள்ளார்.
இந்நிலையில் தொடர்ச்சியாகக் காய்ச்சல், தலைவலி எனச் சிறுமி தவித்து வந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்த சென்று சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஒரு வித மூளையைத் தாக்கும் அமீபாவால் சிறுமி தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். தொடர்ந்து ஒரு வாரம் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த அமீபாவானது நல்ல தண்ணீரில் வளரும் தன்மை கொண்டது. மேலும் மனிதரை அமீபா தாக்கும் போது உடலுக்குள் மூக்கு வழியாகத் தான் உள்ளே நுழையும். பின்னர் முளையின் திசுக்களைத் தாக்கும். இந்த அமீபாவினால் அமெரிக்காவில் மட்டும் கடந்த பத்து வருடத்தில் 34 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இளம்பெண் உயிரைப் பறித்த செல்போன் - குளிக்கும்போது நடந்த விபரீதம் !