அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து, கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் 800-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், சோமாலியாவின் அல்குவைதா ஆதரவு பெற்ற அல் ஷாபாப் இயக்கம் பல்வேறு தாக்குதலை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சோமாலியாவின் வடமேற்கு பகுதியில், சரிபாதி அதிகாரம் கொண்ட தன்னாட்சி பிராந்தியமான புட்லேண்ட் என்னுமிடத்தில், ஐஎஸ் அமைப்பு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, அந்த பகுதியில் அமெரிக்கா ராணுவம் கடந்த 8ஆம் தேதி வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 13 ஐஎஸ் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்க - ஆப்பிரிக்க கூட்டுப்படை உறுதிசெய்துள்ளது.