கென்யாவிலிருந்து எண்ணெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று காங்கோ நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது, உகாண்டாவின் ருபுரிஸி (Ruburizi) மாநிலம் வழியாக வந்த இந்த டேங்கர் லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதையடுத்து, தாறுமாறாக சென்ற டேங்கர் லாரி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தில் மீது பயங்கரமாக மோதி அதீத சத்தத்துடன் வெடித்துள்ளது. இந்தக் கோர விபத்தில் 20 பேர் பலியாகினர். மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி காவல் அலுவலர் ஒருவர் கூறுகையில், டேங்கர் லாரி வெடித்ததில் அருகிலிருந்த கடைகள், சந்தை, இரண்டு வாகனங்கள் தீக்கிரையாகின என்றார்.