Latest National News உகாண்டா தலைநகர் கம்பாலாவில் காமன்வெல்த் நாடுகளின் 64ஆவது கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் ஆதிர் ரஞ்சன் சௌதிரி, ரூபா கங்குலி, ஹனுமந்தையா ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த பிரதிநிதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிகளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுவருவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு இந்தியப் பிரதிநிதிகள் கடும் ஆட்சேபனை எழுப்பியதாக இந்திய நாடாளுமன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தானில்தான் ராணுவ ஆட்சி என்பது வழக்கமான ஒன்று என்றும்; அந்நாடு கடந்த 33 ஆண்டுகளாக அத்தகைய ஆட்சியில்தான் உள்ளது என்றும் இந்தியப் பிரதிநிதிகள் பதிலடி கொடுத்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இம்மாத தொடக்கத்தில், மாலத்தீவில் நடந்த தெற்காசிய நாடுகளின் மாநாட்டின்போதும் காஷ்மீர் தொடர்பான பிரச்னையை பாகிஸ்தான் எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: ‘சமூக வலைதளங்களை ஒழுங்குப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - உச்ச நீதிமன்றம்