எகிப்து நாட்டைச் சேர்ந்த தொழிலலதிபர் முகமது அலி. எகிப்திலிருந்து தப்பித்து தற்போது ஸ்பெயின் நாட்டில் தஞ்சம் புகுந்த மொகமது அலி, எகிப்து அதிபர் ஊழல் வாதியென்றும் அவர் பதவி விலக வலியுறுத்தி குடிமக்கள் போராட வேண்டும் எனக் கூறி தன் டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவியது, காரசாரமாக விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, எதிப்து அதிபர் எல்சிசி-க்கு எதிராக அந்நாடு முழுவதும் நேற்று (உள்ளூர் நேரப்படி) போராட்டங்கள் வெடித்தன. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்களில், போராட்டக்காரர்கள் அதிபர் சிசியின் புகைப்படம் அச்சிடப்பட்ட பேனர்களைக் கிழிப்பது போன்ற காட்சிகளும் அமைந்துள்ளன.
போராட்டத்தை கலைக்க வந்த காவல் துறையினருடன் போராட்டக்காரர்கள் மல்லுக்கட்டினர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
எகிப்தில் இதுபோன்று போராட்டங்கள் மிகவும் அரிதாகும். 2013-ஆம் ஆண்டு எகிப்த் ராணுவப் புரட்சியின் போது அனுமதியற்ற போராட்டங்களுக்கு அந்நாட்டில் தடைவிதிக்கப்பட்டது.
2018-ஆம் ஆண்டு, எகிப்து அதிபராக ( இரண்டாவது முறை ) அப்தல் ஃபட்டா எல்சிசி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, எகிப்து பாதுகாப்புப் படையினர் அந்நாட்டு மக்கள் மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பு (Human Rights Watch) அமைப்பு தெரிவித்துள்ளது.
தொழிலதிபர் முகமது அலியின் 'ஊழல் குற்றச்சாட்டை' அதிபர் எல்சிசி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.