ஆப்பிரிக்கா கண்டத்தில் 54 நாடுகள் உள்ளன. கிட்டத்தட்ட, அனைத்து ஆப்பிரிக்க நாடுகளிலும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதுவரை 2 லட்சத்து 2 ஆயிரத்து 782 பேர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்து 516 பேர் இந்தக் கொடிய வைரசின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் 52 ஆயிரத்து 991 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அங்குள்ள மக்களை மிகுந்த கவலையடையச் செய்துள்ளது. ஆப்பிரிக்கா கண்டத்தில் அதிக பாதிப்பில் தென் ஆப்பிரிக்கா முதல் இடம் வகிக்கிறது.
அதில், அதிகப்படியானோர் மேற்கு கேப் மாகாணத்தில் உள்ள கேப்டவுன் நகரத்தைச் சேர்ந்தவர்களாவர். எகிப்த்தில் 36 ஆயிரத்து 829 பேரும், நைஜீரியாவில் 13 ஆயிரத்து 464 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:'மூச்சு விட முடியல' என்று கதறிய பின்னரும் விடாத போலீஸ் - உயிரிழந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்