ETV Bharat / international

’தென் ஆப்பிரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்’ - தென் ஆப்பிரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினர்

தென் ஆப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் குறிவைத்து தாக்கப்படுவதாக தகவல்கள் வெளிவரும் நிலையில், டர்பனில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இது குறித்து ட்வீட் செய்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்கா
author img

By

Published : Jul 17, 2021, 4:25 PM IST

தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான ஜூமா ஜூலை 7ஆம் தேதி சிறையிலடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் வன்முறை வெடித்துள்ளது. இதில் நாட்டின் பலதரபட்ட மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய வம்சாவளியினர் குறிவைத்து தாக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், டெல்லியில் உள்ள தென் ஆப்பிரிக்கா தூதரை உடனடியாக அழைத்து இந்திய அரசு தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், வெளியுறவுத் துறையின் மூலம் தென் ஆப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்றும் தென் ஆப்பிரிக்கா வாழ் இந்தியர்கள் முன்னதாக கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தோடு பேசியுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து டர்பனில் உள்ள இந்திய துணைத் தூதரகம், "தென் ஆப்பிரிக்காவில் உள்ள நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளும் இந்திய சமூகத்தினர், அவர்களது வாழ்வாதாரங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நாங்கள் தென் ஆப்பிரிக்க அரசையும், வேறு சம்மந்தப்பட்ட நிறுவனங்களையும் தொடர்பு கொண்டுள்ளோம்" என ட்வீட் செய்துள்ளது.

மேலும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கரை டாக் செய்து தென் ஆப்பிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புத் துறை அமைச்சர் நலேடி பாண்டருடன் பேசியுள்ளதாகவும், இயல்புநிலை மீட்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளதாகவும் இந்திய துணைத் தூதரகம் ட்வீட் செய்துள்ளது.

இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு 87.1% பேர் எதிர்ப்பு - கருத்துக்கணிப்பில் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.