ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த சில நாட்களாக எபோலா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த நோயால் இதுவரை சுமார் 1600 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 2500 பேருக்கு நோய் தொற்று உள்ளது. 2 லட்சம் மக்களுக்கு நோய் தொற்று அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
உலகை மிரட்டியுள்ள இந்த சம்பவத்தை தொடர்ந்து, காங்கோவில் சர்வதேச சுகாதார அவசரநிலையை அந்நாட்டு அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. மேலும் இந்த அவரச நிலை பிரகடனம் உலகளவில் ஐந்தாவது முறையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஜிகா வைரஸ் தாக்கம் தொடர்பாக அமெரிக்காவிலும், எபோலா வைரஸ் காரணமாக மேற்கு ஆப்பிரிக்காவிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நோய் தாக்குதலுக்கு 2014 முதல் 2016ஆம் ஆண்டு வரை 11 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.