சென்னை: தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 4,481 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது எனவும், தொற்றினால் புதிதாக பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருவதால் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கையும் 37 ஆயிரத்து 526 எனக் குறைந்துள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறை ஜூலை 1ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 973 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்த நான்காயிரத்து 480 நபர்களுக்கும், ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என நான்காயிரத்து 481 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை மூன்று கோடியே 21 லட்சத்து 58 ஆயிரத்து 926 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 24 லட்சத்து 84 ஆயிரத்து 177 நபர்கள் தொற்று பாதிப்பிற்குள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.
இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 37 ஆயிரத்து 526 சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் மேலும் குணமடைந்த 5,044 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களது எண்ணிக்கை 24 லட்சத்து 13 ஆயிரத்து 930 என உயர்ந்துள்ளது.
மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் தனியார் மருத்துவமனைகளில் 24 நோயாளிகளும், அரசு மருத்துமனைகளில் 78 நோயாளிகளும் என 102 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 721 என அதிகரித்துள்ளது.
மேலும் கோயம்புத்தூரில் புதிதாக 498 நபர்களுக்கும், ஈரோட்டில் 411 நபர்களுக்கும், சேலத்தில் 279 நபர்களுக்கும், சென்னையில் 249 நபர்களுக்கும், தஞ்சாவூரில் 248 நபர்களுக்கும், திருப்பூரில் 256 நபர்களுக்கும் என அதிகளவில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவமனை, வீடுகளில் சிகிச்சைப் பெறுபவர்களில் கோயம்புத்தூரில் 3,805 பேர் உள்ளனர். ஈரோட்டில் 4,080 பேரும், சென்னையில் இரண்டாயிரத்து 931 நபர்களும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். தஞ்சாவூரில் அதிகபட்சமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 5,32,759
கோயம்புத்தூர் - 22,005
செங்கல்பட்டு - 1,57,085
திருவள்ளூர் - 1,11,135
சேலம் - 88,205
திருப்பூர் - 82,723
ஈரோடு - 89,934
மதுரை - 72,377
காஞ்சிபுரம் - 70,342
திருச்சி - 69,473
தஞ்சாவூர் - 63,812
கன்னியாகுமரி - 59,047
கடலூர் - 58,071
தூத்துக்குடி - 54,401
திருநெல்வேலி - 47,244
திருவண்ணாமலை - 49,524
வேலூர் - 46,961
விருதுநகர் - 44,604
தேனி - 42,367
விழுப்புரம் - 42,535
நாமக்கல் - 44,810
ராணிப்பேட்டை - 40,970
கிருஷ்ணகிரி - 39,986
திருவாரூர் - 36,889
திண்டுக்கல் - 31,658
புதுக்கோட்டை - 27,042
திருப்பத்தூர் - 27,587
தென்காசி - 26,422
நீலகிரி - 28,443
கள்ளக்குறிச்சி - 27,193
தருமபுரி - 24,605
கரூர் - 22,077
மயிலாடுதுறை - 20,177
ராமநாதபுரம் - 19640
நாகப்பட்டினம் - 17,820
,
சிவகங்கை - 17,751
அரியலூர் - 14,906
பெரம்பலூர் - 11,089
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,005
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,075
ரயில் மூலம் வந்தவர்கள் - 428