ETV Bharat / headlines

முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலின் - எவ்வாறு செயல்படப் போகிறார்! - Stalin in political

கரோனா தொற்று, கடன் சுமை, பொருளாதார பின்னடைவு உள்ளிட்ட நெருக்கடியான காலகட்டத்தில் முதலமைச்சர் பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலின் திறம்பட செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

முதலமைச்சராகும் ஸ்டாலின்
முதலமைச்சராகும் ஸ்டாலின்
author img

By

Published : May 3, 2021, 12:28 PM IST

தமிழ்நாடு சட்டபேரவை தேர்தலில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ளார். இதற்கு முன்பு மேயர், உள்ளாட்சி துறை அமைச்சர், துணை முதலமைச்சர் உட்பட பல பதவிகளை வகித்த முக ஸ்டாலின் முதன் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்கிறார்.

வாக்குகளால் ஓரங்கட்டப்பட்ட அவதூறுகள்

கடந்த ஐந்து ஆண்டுகளாக களத்தில் கடுமையாக பணியாற்றியது, மக்கள் சந்திப்பு, கிராம சபை என பல்வேறு சந்திப்புகளில் இடைவிடாது இயங்கி ஸ்டாலின் இதை சாத்தியப்படுத்தி உள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “6ஆவது முறையாக திமுக ஆட்சி செய்ய கட்டளையிட்டுள்ள வாக்காளர்களுக்கு நன்றி! திமுக மீது வீசப்பட்ட அவதூறுகளை வாக்குகளால் ஓரங்கட்டிய வாக்காளர்களுக்கு நன்றி! உண்மையாக உழைப்பேன்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு டிஜிட்டல் பரப்புரை மூலம் இளைய வாக்காளர்களை அவர் வெகுவாக கவர்ந்தார்.

14 வயதிலிருந்தே அரசியல் அவதாரம்:

திமுக மீதுள்ள ஈர்ப்பால் இளம் வயதிலேயே கட்சியில் இணைந்து பணியாற்றினார், 14 வயதில் முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனுக்காக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். 1976ஆம் ஆண்டு எமர்ஜென்சியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1982ஆம் ஆண்டு ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக பணியாற்றினார்.

1989ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1996ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு எதிரான மிகப்பெரிய அலை வீசியபோது போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கட்சிக்கு மேலும் வலு சேர்த்த ஸ்டாலின்

2011ஆம் ஆண்டு முதன்முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். பின்பு 2016இல் வெற்றி பெற்று எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்றார். தற்போது மீண்டும் 3ஆவது முறையாக அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

1996ஆம் ஆண்டு சென்னை மேயராக பதவி வகித்தார். அப்போது ஒன்பது மேம்பாலங்களை கட்டினார். சென்னையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினார்.

அதே போல் 2006இல் ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்தார். 2008ஆம் ஆண்டு திமுக பொருளாளராக பதவி வகித்தார். 2009ஆம் ஆண்டு துணை முதலமைச்சராக பதவி வகித்தார். கருணாநிதி மறைவிற்கு பின் திமுக தலைவராக பதவியேற்று கட்சியின் கட்டமைப்பை மேலும் பலப்படுத்தினார்.

ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின்:

திமுக பொருளாராக இருந்த ஸ்டாலின், கருணாநிதி மறைவிற்கு பின்பு திமுக தலைவர் பொறுப்பிற்கு ஒரு மனதாக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சிக்கு புறம்பாக செயல்படுபவர்களை ஜெயலலிதா பாணியில் அதிரடியாக நீக்கினார். கட்சியை ஒரே தலைமையின் கீழ் இயக்கினார். கட்சி நிர்வாகிகளுடன் நாள்தோறும் சந்திப்பு என பரபரப்பாக இயங்கினார். அதே சமயம் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு போராட்டங்களை முன்னெடுத்தார். பொதுமக்கள் சந்திப்புகளை அதிகப்படுத்தினார். திமுக தலைவர், ஜெயலலிதா பாணியில் கட்சியை நடத்துகிறார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சராகும் ஸ்டாலின்:

கடந்த 40 ஆண்டுகளாக கட்சியில் உழைத்து முதன் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். மிக இக்கட்டான சூழ்நிலையில் அரசு பொறுப்பை ஏற்கும் அவர் முன் கரோனா தொற்று பெரும் நெருக்கடியாக இருக்கிறது. அதேபோல் பொருளாதார ரீதியாகவும், வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டி உள்ளது. தமிழ்நாட்டில் புதிய தொழில் வாய்ப்புகளை ஈர்க்க வேண்டும். கடன் சுமை உள்ளிட்ட நெருக்கடியான காலகட்டத்தில் பொறுப்பேற்கும் ஸ்டாலின் எவ்வாறு செயல்பட போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.