ETV Bharat / entertainment

Thalaivar 170: ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’ படக்குழுவினர் நாளை முதல் அறிமுகம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2023, 8:02 PM IST

Thalaivar 170 Squad Team announcement: இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள 170வது படத்தின் குழுவினர் நாளை முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவரது படங்கள் தமிழ் சினிமா வரலாற்றில் பாக்ஸ் ஆபிஸில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.‌ இந்த நிலையில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம், ஜெயிலர்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.‌ அனிருத் இசை அமைத்திருந்தார். மேலும், இப்படத்தில் தமன்னா, சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்தது. மேலும், கிட்டத்தட்ட உலகம் முழுவதும் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்திருந்தது.

இதனிடையே, தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இப்படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஜெய்பீம் படத்தை இயக்கிய டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் ரஜினி காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விபரங்கள் நாளை முதல் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 4ஆம் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சந்திரமுகி 2 படக்குழுவினரை வாழ்த்திய ரஜினிகாந்த் - கங்கனா ரனாவத் ரியாக்‌ஷன் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.