ETV Bharat / entertainment

தளபதி 68வது படம் அமெரிக்காவை அதிர வைத்த தனி ஒருவனின் கதையா 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'?.. - db cooper

Thalapathy 68 Movie: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (டிச.31) வெளியான நிலையில், அப்படத்தின் கதை அமெரிக்காவை அலற விட்ட தனி ஒருவரின் கதையாக இருக்குமோ என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

actor vijay
actor vijay
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2023, 10:53 PM IST

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (GOAT) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

அதேபோல், சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயன், ஒளிப்பதிவாளர் சித்தார்தா நுனி, தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன், எடிட்டர் வெங்கட் ராஜன் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் இப்படத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

இப்படத்தின், தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (டிச.31) வெளியிடப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க போஸ்டரை பார்த்தவர்கள் இது என்ன மாதிரியான கதை என்று தேடி வருகின்றனர். அதனடிப்படையில் அமெரிக்காவை அலற விட்ட தனி ஒருவரின் கதையாக இருக்குமோ என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து பரவி வருகிறது.

அமெரிக்காவில், கடந்த 1971ஆம் ஆண்டு டி.பி. கூப்பர் என்பவர் போயிங் 727-100 ரக விமானத்தைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். போர்ட்லேண்ட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சியாட்டில் செல்லும் விமானத்தில் ஏறிய அவர் விமானத்தைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். சியாட்டிலில் இறங்கிய அவரிடம் பணம் கொடுத்து அவர் கேட்டவாறு மற்றொரு விமானத்தில் ஏற்றி மெக்சிகோ அனுப்பி வைத்தனர்.

பின்னர், எஃப்பிஐ பின்னாடியே மூன்று ராணுவ விமானத்தை அனுப்பியது. விமானம் பறந்து கொண்டு இருக்கும் போதே திடீரென விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்துத் தப்பிவிட்டார். பின்னால் வந்த விமானங்களின் கண்களில் கூட அவர் தென்படவில்லை.

இன்று வரை, மர்மமாக இருக்கும் இந்த வழக்கின் விசாரணை சமீபத்தில் தான் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. உடல் முழுக்க பணத்தைக் கட்டிவிட்டு கூப்பர் தப்பித்து இருக்கலாம் என்று அமெரிக்க போலீஸ் யூகித்தது.

பயணிகளிடம் நடந்த விசாரணையை அடிப்படையாக வைத்து அவரது புகைப்படமும் வெளியிடப்பட்டது. இன்று வரை மர்மமாக உள்ள இவரைப் பற்றிய கதைதான் விஜய் நடித்து வரும் படத்தின் கதை என்று தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பும் அதனை உறுதி செய்யும் வகையில் தான் உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் உள்ளதால் அவர்கள் அனைவரும் விமானத்தில் பயணிக்கும் பயணிகளாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த உண்மை தகவல் அடுத்தடுத்து படக்குழு வெளியிடும் அப்டேட்களில் தெரிய வரும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: The Greatest of All Time; தளபதி 68 ஃப்ர்ஸ்ட் லுக் வெளியானது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.