ETV Bharat / entertainment

புதுமையான கேங்ஸ்டர் கதையாக, ரசிர்களிடம் வரவேற்பைப் பெற்ற 'பரோல்' பட ட்ரெய்லர் - குடும்ப பின்னணியில் நடக்கும் எமோஷனல் கதை

கேங்ஸ்டர் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள பரோல் திரைப்படத்தின் ட்ரெய்லருக்கு மக்கள் வரவேற்பளித்து வருகின்றனர்.

ரசிர்களிடம் வரவேற்பை பெற்ற “பரோல்” பட டிரெய்லர்

author img

By

Published : Sep 13, 2022, 3:19 PM IST

TRIPR ENTERTAINMENT மதுசூதனன் தயாரிப்பில், இயக்குநர் துவாரக் ராஜா இயக்கத்தில், இளம் திறமையாளர்களின் நடிப்பில், குடும்ப உறவுகளின் பின்னணியில் ஒரு புதுமையான கேங்ஸ்டர் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள படம் “பரோல்”. சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். மேலும் ட்ரெய்லரில் கதைக்கு அவர் வாய்ஸ் ஓவரும் தந்திருந்தார். படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

இப்படம் குறித்து இயக்குநர் துவாரக் ராஜா கூறியதாவது, ' “பரோல்” படத்தின் ட்ரெய்லருக்கு கிடைத்து வரும் வரவேற்பு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இப்படம் எங்கள் குழுவினரின் பெரும்கனவு. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கதை இருக்கும். ஆனால் ஒரு குடும்பத்திற்குப் பின்னால் உள்ள சொல்லப்படாத, சொல்லமுடியாத ஒரு கதை தான் இது. தாய் இறந்த காரணத்தினால் தனக்குப்பிடிக்காத அண்ணனை பரோலில் எடுக்கிறான், தம்பி. அவனுக்கும் அவன் அண்ணனுக்குள் உள்ள பிரச்னையும், அதைச்சுற்றி நடக்கும் பரபரப்பான சம்பவங்களுமே இப்படம்.

இது குடும்ப பின்னணியில் நடக்கும் எமோஷனல் கதை. ஆனால், வலுவான ஆக்ஷனும் பரபரப்பான திரைக்கதையும் உள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்விக்கும் படமாகவும் இருக்கும். இப்படத்திற்கு குரல் தந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு நன்றி. ட்ரெய்லரில் மட்டுமல்ல படத்திலும் அவர் வாய்ஸ் ஓவர் தந்துள்ளார்.

படம் முடித்தவுடனே அவரிடம் காட்டினேன், படம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போது நீங்கள் படத்தின் ஆரம்பத்தில் குரல் தந்தால் நன்றாக இருக்குமென்றேன். உடனடியாக ஒப்புக்கொண்டு அவரின் கடின வேலைகளுக்கிடையில் செய்து தந்தார். அவருக்கு பெரிய நன்றிகள்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இப்படத்தின் நடிகர்களும் தொழில் நுட்பக்கலைஞர்களும் மிகப்பெரிய தூணாக இருந்து உழைத்துள்ளார்கள். அவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இப்படம் கண்டிப்பாக அனைவரையும் திருப்திபடுத்தும் புதுமையான படமாகவும், தமிழ் சினிமாவில் ஒரு அழுத்தமான படைப்பாகவும் இருக்கும்.

R.S. கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, டென்னிஸ் இமானுவேல் ஆகியோருடன் மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், படத்தின் திரையரங்கு வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு, விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்’ என்றார்.

இதையும் படிங்க: மறைந்த பாலிவுட் நடிகை சோனாலி போகட்டின் கடைசி படம் விரைவில்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.