ETV Bharat / entertainment

விஜய் ஆண்டனி படங்களை பார்த்ததே இல்லை மிஷ்கின் - Vijay Antony

விஜய் ஆண்டனி படங்களை நான் பார்த்தது இல்லை என இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்

விஜய் ஆண்டனி படத்தை பார்த்ததே இல்லை  மிஷ்கின்

author img

By

Published : Aug 13, 2022, 7:23 AM IST

பாலாஜி கே.குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ராதிகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கொலை. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி, மிஷ்கின், விஜய் மில்டன், டி.சிவா, சிஎஸ்.அமுதன், ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, தனஞ்செயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மிஷ்கின், "நான் விஜய் ஆண்டனி படங்களை பார்த்தது இல்லை. இதிகாசங்களில் எங்கு பார்த்தாலும் கொலைகள் பரவியுள்ளது. கரோனா என்ற கொலைகாரன் நமது நண்பர்களை கொன்று சென்றது. நமது குழந்தைகளை நாம் மிகவும் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். விஜய் ஆண்டனி மிகப் பெரிய நடிகராக இந்த போட்டியான துறையில் தனக்கென தனிபாதை அமைத்து வெற்றிபெற்று வருகிறார்" என கூறினார்.

விஜய் ஆண்டனி படத்தை பார்த்ததே இல்லை மிஷ்கின்

விஜய் ஆண்டனி பேசியது, "இது முழுக்க முழுக்க இயக்குனரின் கனவு. படம் ஓடினால் இயக்குனரின் பொறுப்புதான். இப்படம் உலகத் தரத்தில் இருக்கும். இக்கதையை கேட்கவே 7 மணிநேரம் எடுத்துக்கொண்டேன். நல்ல படங்களை நமது மக்கள் ஓட வைப்பார்கள். இதுவும் நல்ல படம் உங்களது ஆதரவு தேவை" என்றார்.

இதையும் படிங்க: கர்மா திருப்பி அடிக்கும் எனக்கூறும் ஜீவி இரண்டாம் பாக நாயகன் வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.