ETV Bharat / entertainment

ஜப்பானில் சிக்கிய பிரபல தெலுங்கு நடிகர்! - ஜப்பான் சுனாமி

Jr NTR: ஜப்பானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் தாக்கத்தில் இருந்து பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தப்பியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 1:03 PM IST

சென்னை: ஜப்பானின் மேற்கு பகுதியில் 7.5 என்ற ரிக்டர் அளவில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கமானது, புத்தாண்டு தினமான ஜனவரி 1 அன்று மதியம் உணரப்பட்டது. குறிப்பாக, ஜப்பானின் வாஜிமா மற்றும் இஷிகவா பகுதிகளில் நிலநடுக்கம் அதிகளவில் உணரப்பட்டது. இதனால் கட்டடங்கள் குலுங்கி, வாஜிமா நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் இடிந்து பெருத்த சேதத்தைச் சந்தித்துள்ளன.

இந்த இயற்கைப் பேரிடரில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும், 7 பேர் படுகாயங்கள் உடன் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • Back home today from Japan and deeply shocked by the earthquakes hitting. Spent the entire last week there, and my heart goes out to everyone affected.
    Grateful for the resilience of the people and hoping for a swift recovery. Stay strong, Japan 🇯🇵

    — Jr NTR (@tarak9999) January 1, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், அந்நாட்டு வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையால் 120 சென்டி மீட்டருக்கும் மேல் அலை எழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தற்போது ஜப்பானில் விடுக்கப்பட்ட அனைத்து வகையான சுனாமி எச்சரிக்கைகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர், இன்று (ஜன.2) தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த பதிவில், “ஜப்பானில் இருந்து இன்று பாதுகாப்பாக வீட்டுக்குத் திரும்பியுள்ளேன். ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த வாரம் முழுவதும் நான் ஜப்பானில் நேரத்தைக் கழித்தேன்.

இந்த நேரத்தில் நிலநடுக்கத்தால் பாதிப்படைந்த ஒவ்வொருவருடனும் என் மனது இருக்கிறது. அவர்கள், விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஜப்பான் மக்கள் உறுதியுடன் இருங்கள்” என தெரிவித்துள்ளார். முன்னதாக, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஜூனியர் என்டிஆர் ஜப்பான் சென்றார். அவருடன் அவரது மனைவி லக்‌ஷ்மி பிரனிதி, குழந்தைகள் அபய் மற்றும் பார்கவ் ஆகியோரும் சென்றிருந்தனர்.

இவ்வாறு குடும்பமாக விடுமுறையைக் கழிக்க ஜப்பான் சென்றவர்கள், இயற்கை மாற்றங்கள் காரணமாக பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர். ஜூனியர் என்டிஆர், தற்போது இயக்குநர் கொரட்டலா சிவாவின் தேவரா படத்தின் முதல் பாகத்தில் நடித்து வருகிறார். வருகிற ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் புதிய போஸ்டர் புத்தாண்டு தினத்தன்று வெளியிடப்பட்டது.

இதன் மூலம் தேவரா படத்தின் முதல் பாகத்தின் பர்ஸ்ட் லுக் ஜனவரி 8 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூலம் ஜான்வி கபூர் டோலிவுட் சினிமாவில் அறிமுகமாகிறார். மேலும், இப்படத்தில் சாயிஃப் அலி கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பியர்லெஸ் தியேட்டரின் 62 கால கலைப்பயணம் நிறைவு..! சோகத்தில் ரசிகர்கள்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.