சென்னை: தமிழ் சினிமாவில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் 2009ஆம் ஆண்டு வெளிவந்த ‘நியூட்டனின் 3ஆம் விதி’ என்ற படத்தை இயக்கி அறிமுகமானவர் தாய்செல்வம். இவர் இயக்கி தனியார் தொலைக்காட்சியில் 2017ஆம் ஆண்டு வெளியான மௌனராகம் சீரியல் மூன்று வருடங்களுக்கும் மேல் ஒளிபரப்பாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கு இருவர், கல்யாணம் முதல் காதல் வரை, உள்ளிட்ட பல்வேறு வெற்றி தொடர்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் ஈரமான ரோஜாவே சீரியலின் 2ஆம் பாகத்தை இயக்கி வந்த தாய்செல்வம் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: உதயநிதியை வாரிசு என்ற காரணத்துக்காகவே ஒதுக்கக்கூடாது - இயக்குநர் பார்த்திபன்