ETV Bharat / entertainment

அத்து மீறும் அசீம்; கொந்தளிக்கும் நெட்டிசன்கள் - தட்டிக்கேப்பாரா கமல் - sivin

தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் - 6 நிகழ்ச்சியின் போட்டியாளரான அசீம் தரம் குறைவான வார்த்தைகளாலும், செய்கைகளாலும் போட்டியாளர்களை இழிவு படுத்துவதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Etv Bharatஅத்து மீறும் அசீம்; கொந்தளிக்கும் நெட்டிசன்கள் - தட்டிக்கேப்பாரா கமல்

author img

By

Published : Dec 24, 2022, 11:52 AM IST

Updated : Dec 24, 2022, 12:08 PM IST

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒன்றாகும். இந்நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலர் சினிமாவிலும் பல படங்களில் நடித்து வருகின்றனர். மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளா பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் பல மொழிகளில் வெற்றிகரமாக ஓடிவரும் நிகழ்ச்சியாகும். மேலும் தமிழில் முதல் சீசன் 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பானது. இதன் முதல் சீசனில் பங்கேற்ற நடிகை ஓவியாவிற்கு ரசிகர் பட்டாளமே உருவானது. இதனையடுத்து சீசன் 3 இல் வந்த வனிதா, மீராமிதுன் என பலர் கலவையான விமர்சனங்களை பெற்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி பல தரப்பட்ட மக்களாலும் விரும்பபட்டு வரும் நிலையில், தற்போது சீசன் 6 ஒளிபரப்பி வருகிறது. இதில் சின்னத்திரை நடிகர் அசீம் போட்டியாளராக உள்ளார். மேலும் பத்திரிக்கையாளராக பணியாற்றிய விக்ரமனும் இதில் பங்கேற்று வருகிறார்.

ட்ரெண்டாகும் க்ளவுன் அசீம்
ட்ரெண்டாகும் க்ளவுன் அசீம்

இந்த சீசன் கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கியது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் 11 பேர் வெளியேறி தற்போது 9 பேர் இருந்து வருகின்றனர். இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் - 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் அசீம் நிகழ்ச்சி தொடங்கிய வாரத்தில் இருந்தே சக போட்டியாளர்களை ஆத்திரத்தில் தகாத வார்த்தைகளால் திட்டுவதும், தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் அசீம் குறித்து சமூக வலைத் தளங்களில் பல குற்றச்சாட்டு பதிவுகள் போடப்படுகின்றன. போட்டி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்து ஆயிஷாவை திட்டியதும், விக்ரமனுடன் ஒருமையில் உரையாடியதும் சமூக வலைத்தளத்தில் பெரும் பேசுபொருளானது. சக போட்டியாளரான சிவின் திருநங்கை என்பதனால் அவரது உடல் பாவனை போல் செய்வது, அனைவரையும் ஒட்டுமொத்தமாக திட்டுவதையே ஒவ்வொரு வாரமும் செய்து வருகிறார்.

ரெட் கார்டு கொடுப்பாரா கமல்? பிக்பாஸ் போன்ற மக்களிடத்தில் பிரபலமைடந்த நிகழ்ச்சியில் போட்டியாளர் செய்யும் அவதூறான செயல்களை தடுக்க வேண்டு என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். வார இறுதியில் கமல் வரும் எபிசோடுகளில் அசீமை கமல்ஹாசன் எச்சரிக்கை செய்தாலும் அவர் திருந்தாமல் அதே போல் பேசி வருவதால் ரெட் கார்ட் ஏன் கொடுக்க வில்லை என கேள்வி எழும்பியுள்ளது. கமல்ஹாசன் கண்டித்த பின்னும் அசீமின் நடவடிக்கைகள் மாறவில்லை எனவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். வாக்குவாதம் நடக்கும் போது பிரச்சனை குறித்து பேசாமல் அனைவரையும் திட்டுவதை மட்டுமே அசீம் செய்து வருவதாக அவருக்கு நெட்டிசன்கள் ClownAzeem என மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

ரச்சிதா, ஆயிஷா, ஜனனி, ஏடிகே மற்றும் அமுதவாணன் உட்பட கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களையும் அசீம் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இருப்பினும் சிவின் மற்றும் விக்ரமன் ஆகியோரை அசீம் தனிப்பட்ட முறையில் அதிக அளவில் இழிவாக பேசியுள்ளார். எனவே நெட்டிசன்கள் இன்று(டிச.24) கமல்ஹாசன் அசீமிற்கு ரெட்கார்டு கொடுக்க வேண்டும் என தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க:வாரிசு, துணிவு குறித்து வடிவேலு கூறிய பதில் என்ன?

Last Updated : Dec 24, 2022, 12:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.