சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது அவர் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
அந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்க உள்ள இப்படத்திற்கு மாவீரன் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின் இப்படத்தின் தலைப்பை லீக் செய்துள்ளார்.
ஏற்கனவே தமிழ் திரையுலக பிரபலங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா உள்பட பலரும் ராணுவ வீரர்கள்
கேரக்டரில் நடித்து இருக்கும் நிலையில் தற்போது அடுத்த கட்டமாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'டான்' படம் பார்த்து கண்கலங்கிய ரஜினி..!