ETV Bharat / entertainment

#26YearsOfYuvanism: 'அளவற்ற அன்பிற்கு நன்றி' - யுவன் நெகிழ்ச்சி - யுவன் ட்வீட்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா திரையுலகில் அடியெடுத்து வைத்து 26 ஆண்டுகள் கடந்ததையொட்டி அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் #26YearsOfYuvanism என்ற ஹாஷ்டேக்கை தொடங்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

yuvanism
yuvanism
author img

By

Published : Mar 2, 2023, 7:48 AM IST

சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இந்த ஒன்றை பெயரைச் சொன்னால் போதும் இன்றைய இளைஞர்களின் இதயத்துடிப்பு கூட இவரது இசையாகத்தான் துடிக்கும். இவர் தனது பாடல்கள் மூலம் ரசிகர்களின் உள்ளத்தில் கலந்திருப்பவர். உங்களது அன்றாட வாழ்க்கையில் இவரது ஒரு பாடலையாவது கேட்காமல் பொழுதை கடக்க முடியாது. இஸ்திரி கடை, டீக்கடை, பழக்கடை , பேருந்து நிறுத்தம், ஆட்டோ ஸ்டாண்ட் என‌ உழைக்கும்‌ மக்கள் இருக்குமிடம் ஆகட்டும் கல்லூரி மாணவர்கள் சூழ்ந்திருக்கும் இடமாகட்டும் அங்கெல்லாம் யுவனின் இசை ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த இசை அரக்கன் தமிழ் திரையுலகில் 26ஆவது ஆண்டை கொண்டாடுகிறார்.

யுவன் அறிமுகம்
யுவன் அறிமுகம்

1997ஆம் ஆண்டு சரத்குமார் நடித்த அரவிந்தன்‌ படத்தில் முதல் முறையாக இசை அமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தில் இடம்பெற்ற ஈர நிலா என்ற பாடல் இப்போது கேட்டாலும் உள்ளுக்குள் ஏதோ செய்யும். தொடர்ந்து இளைஞர்களின் இதரத்துடிப்புக்கு ஏற்ப இசையை கொடுத்துக்கொண்டு வந்தவர். மெல்ல மெல்ல பின்னணி இசையின் பிதாமகன் ஆனார்.

இப்படி தனது 26 ஆண்டு திரை வாழ்வில் எத்தனையோ அதிரடி சரவெடிகளை வெடிக்க விட்டவர் யுவன்‌ சங்கர் ராஜா. இவரது 26ஆவது வருடத்திற்கு இவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஹாஸ்டேக் (#26YearsOfYuvanism) தொடங்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

யுவன் ட்வீட்
யுவன் ட்வீட்

இந்த ஹாஸ்டேக் அடிப்படையில் ரசிகர்களின் அன்புக்கு நன்றி என்று யுவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “என்னுடைய 26 வருட திரையிசை பயணத்தை வாழ்த்தி நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி. உங்களுடைய நிபந்தனையற்ற அன்புக்கு மரியாதை உள்ளவனாக இந்த ஆண்டு நிறைய இசையை நிச்சயம் கொடுப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விவேக்கின் ஆசையை நிறைவேற்றுமா 'இந்தியன் 2' படக்குழு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.