ETV Bharat / entertainment

இயக்குனர் ஷங்கர் இல்லாமல் கே.டி., குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் ’ஜென்டில்மேன் 2’!! - gokul krishna

மெகா தயாரிப்பாளரான கே. டி. குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் பிரமாண்ட படம் ஜென்டில்மேன் 2. இந்தப் படத்தை அ.கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார்.

இயக்குனர் ஷங்கர் இல்லாமல் கே. டி. குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் ’ஜென்டில்மேன் 2’!!

author img

By

Published : Jun 7, 2022, 1:36 PM IST

மெகா தயாரிப்பாளான கே. டி. குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்ட படம் 'ஜென்டில்மேன்2 '. இவர் தனது ஜென்டில்மேன், படத்தின் மூலம் ஷங்கர் எனும் பிரம்மாண்ட இயக்குனரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர்.
இப்போது இதன் இரண்டாம் பாகமாக ‘ஜென்டில்மேன்2’ பிரம்மாண்ட படத்தை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே இப்படத்தின் இசை அமைப்பாளராக கீரவாணியை அறிவித்து அசத்தினார். மேலும் இரண்டு கதாநாயகிகளாக நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால் ஆகியோர் பெயரை அறிவித்தார்.

படத்தின் இயக்குனரை அறிவிக்காமல் இருந்ததால், இயக்குனர் யாராக இருக்கும் என்பது ரசிகர்கள் மத்தியிலும் திரைத்துறை வட்டாரத்திலும் சஸ்பென்ஸ் தொடர்ந்தது. தற்போது கே.டி.குஞ்சுமோன் நானி கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்ற ‘ஆஹா கல்யாணம்’ இயக்கிய அ.கோகுல் கிருஷ்ணா தான் 'ஜென்டில்மேன்2' திரைப்படத்தின் இயக்குனர் என்று அறிவித்துள்ளார்.

அ.கோகுல் கிருஷ்ணா ஏற்கனவே பிரபல டைரக்டர் விஷ்ணுவர்தனிடம் பில்லா, அறிந்தும் அறியாமலும், சர்வம், பட்டியல் ஆகிய படங்களின் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதும் நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: 'உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை' - லோகேஷ் கனகராஜுக்கு கமல் எழுதியுள்ள கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.