ETV Bharat / entertainment

'சின்னக் கவுண்டர்' வில்லன் நடிகர் 'சலீம் கவுஸ்' மறைவு - விஜயகாந்த் இரங்கல்! - பிரபல நடிகர் சலீம் கவுஸ் மறைந்தார்

பிரபல வில்லன் நடிகர் சலீம் கவுஸ் இன்று(ஏப்.28) மும்பையில் மறைந்தார். அவரது மறைவிற்கு நடிகரும், தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

’சின்னக் கவுண்டர் ‘ போன்ற படங்களில் நடித்த வில்லன் நடிகர் ’சலீம் கவுஸ்’ மறைவு - விஜயகாந்த் இரங்கல்!

author img

By

Published : Apr 28, 2022, 10:59 PM IST

பிரபல நடிகர் சலீம் கவுஸ்(70) இதயக்கோளாறு காரணமாக மும்பையில் இன்று(ஏப்.28) காலமானார். தமிழில் சின்னக்கவுண்டர், திருடா திருடா, வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர். அதுவும் வேட்டைக்காரன் படத்தில் வேதநாயகம் கதாபாத்திரத்தில் நடித்து ’வேதநாயகம்னா பயம்..!’ என்ற வசனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

’சின்னக் கவுண்டர் ‘ போன்ற படங்களில் நடித்த வில்லன் நடிகர் ’சலீம் கவுஸ்’ மறைவு - விஜயகாந்த் இரங்கல்!
’சின்னக் கவுண்டர் ‘ போன்ற படங்களில் நடித்த வில்லன் நடிகர் ’சலீம் கவுஸ்’ மறைவு - விஜயகாந்த் இரங்கல்!

இந்நிலையில் இவரது மறைவுக்கு நடிகர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், ”நடிகர் சலீம் கவுஸ் அவர்கள் இதயக்கோளாறு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். மிகச்சிறந்த நடிகரும், பழகுவதற்கு நல்ல மனிதருமான சலீம் கவுஸ் அவர்கள் , சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் என்னுடன் 'சக்கரை கவுண்டர்' கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அவரது மறைவு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அஜய் தேவ்கன் - சுதீப் ட்விட்டர் மோதல் : சுதீப்பிற்கு கர்நாடக முதலமைச்சர் ஆதரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.