ETV Bharat / entertainment

விரைவில் இணையும் விஜய் - வெற்றிமாறன் மெகா கூட்டணி… ரகசியம் உடைத்த பிரபல இயக்குநர்! - soori

நடிகர் விஜய் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பது உறுதி என டாணாக்காரன் இயக்குநர் தமிழ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 29, 2023, 5:25 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக அறியப்படுபவர், வெற்றிமாறன். பாலுமகேந்திராவின் பள்ளியில் இருந்து வந்த வெற்றி மாறன் தனது தரமான படைப்புகளான ஆடுகளம், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர். இவரது இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். வெற்றிமாறன் தற்போது நடிகர் சூரியை கதையின் நாயகனாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் சூரி கதையின் நாயகனாகவும் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். விடுதலை சிறிய படமாக தொடங்கி தற்போது இரண்டு பாகம் வரை வளர்ந்துள்ளது.

விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியாகி அடுத்த சில மாதங்களிலேயே இரண்டாவது பாகமும் வெளியாக உள்ளது. இதனை முடித்துவிட்டு சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார். கலைப்புலி தாணு தயாரிக்க உள்ள இப்படத்திற்காக சூர்யா, காளை ஒன்றை வாங்கி வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்தது.

வெற்றிமாறனும் விஜய்க்கு கதை சொன்னதாக சமீபத்திய பேட்டிகளில் கூறியிருந்தார். ஆனால், அடுத்தடுத்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படங்களினால் விஜய்யை வைத்து இயக்குவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் விடுதலை படம் பற்றிய ஒரு நேர்காணலில் டாணாக்காரன் இயக்குநர் தமிழ், விஜய் வெற்றிமாறன் கூட்டணி குறித்து பதிலளித்துள்ளார்.

அதில் ”விஜய், வெற்றிமாறன் கூட்டணி உறுதியானது தான். வெற்றிமாறன் சொன்ன ஒன்லைன் கதையும் விஜய்க்கு பிடித்துவிட்டது” என்று தெரிவித்து இருந்தார். இதனால் வெற்றிமாறன் - விஜய் கூட்டணி உறுதியாகி உள்ளது‌. இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், விஜயை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படம் தொடங்க எப்படியும் இரண்டு மூன்று வருடங்கள் ஆகும் என்பதே உண்மை.

ஏனென்றால் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து மீண்டும் அட்லி இயக்கத்தில் நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. வெற்றிமாறனோ விடுதலை பார்ட் 2, வாடிவாசல் என அதனைத் தொடர்ந்து வடசென்னை பார்ட் 2 என பிஸியாக இருக்கிறார். எனவே, இதை எல்லாம் முடித்துவிட்டு விஜய் படத்தை இயக்குவார் என்று தெரிகிறது.

இதற்கு இடையில் சிங்கம் படம் போன்ற போலீஸ் கமர்ஷியல் படம் ஒன்றை இயக்கும் திட்டத்தில் வெற்றிமாறன் இருக்கிறார் என்றும், இயக்குநர் தமிழ் அந்த நேர்காணலில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'பத்து தல' படம் பார்த்த டிஆர்.. சிம்பு வெளியிட்ட புதிய வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.