ETV Bharat / entertainment

கொண்டாடி கொளுத்தனும் தீ... இங்கிலாந்தில் முன்பதிவில் சாதனை படைத்த லியோ! - லோகேஷ் கனகராஜ்

LEO create history before the release: இங்கிலாந்தில் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் வெளியாக இருக்கும் விஜய்யின் "லியோ" திரைப்படம் வெளியீட்டிற்கு முன்னரே மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது.

Vijay Leo movie has set a record in UK pre booking publishing house has announced
இங்கிலாந்தில் முன்பதிவில் சாதனை படைத்த லியோ
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 8:23 PM IST

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில், லியோ படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், "லியோ" இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாகவே மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  • WHOA! We set the stage, but you stole the show! Over 10k tickets sold in under 24 hours, crossing £100k in sales.. feeling the MASS? 🙌

    The love you've shown for #LEO in UK has left us speechless. Oct 19 is our day to celebrate #Thalapathy. Let's make it unforgettable! ❤️🥺 pic.twitter.com/so9T6rGvTr

    — Ahimsa Entertainment (@ahimsafilms) September 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42 நாட்களுக்கு முன்னதாக, டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், இங்கிலாந்தில் ஒரே நாளில் 10,000க்கும் அதிகமான டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முன்னதாக விநியோகம் செய்த "வாரிசு" திரைப்படம் ஜனவரி 2023இல் முன்பதிவு ஆரம்பித்த முதல் 24 மணி நேரத்தில் சுமார் 2,000 டிக்கெட்டுகளை விற்று சாதனை படைத்தது. இந்த நிலையில் "லியோ" திரைப்படம், அதை விட பன்மடங்கு அதிகமாக டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது.

"லியோ" திரைப்பட அறிவிப்பு வெளியானதிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு பிரமாண்டமானதாக இருந்து வருகிறது. அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், லியோ படத்தின் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவிற்கான திரையரங்கு உரிமைகளைப் பெற்றுள்ளது.

பட வெளியீட்டிற்கு ஆறு வாரங்களுக்கு முன்பே முன்பதிவுகளை தொடங்கி முன்னோடியான நகர்வை மேற்கொண்டது. இந்த உத்தி மிகப் பிரமாதமாக பலனளிப்பதாக தெரிகிறது. "லியோ" இப்போது இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாக முன்பதிவுகளைத் தொடங்கிய முதல் இந்தியத் திரைப்படம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது.

லியோ படம் வரும் நாட்களில் இன்னும் கூடுதலான டிக்கெட்கள் விற்பனையாகி சாதனை படைக்குமென எதிர்பார்க்கபடுகிறது. முன்னதாக அஹிம்சா என்டர்டெயின்மென்ட் விஜய்யின் "பீஸ்ட்" திரைப்படத்தை அமெரிக்காவில் விநியோகம் செய்தது. இதே போன்று, இங்கிலாந்தில் அவர்கள் வெளியிட்ட "வாரிசும்" சாதனை படைத்தது.

அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இது குறித்து கூறும்போது, “லியோ படத்திற்கு முதல் நாளிலேயே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத், சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலமான கூட்டணியால் மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரசிகர்கள் மிகப்பெரும் ஆதரவைத் தந்து வருகிறார்கள்.

இங்கிலாந்தில் இந்திய படமொன்றின் மிகப்பெரிய வெளியீடாக இப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும், ரசிகர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: ஜெயிலர் படத்தின் சிவராஜ் குமார், மோகன்லால் மிரட்டல் தீம் மியூசிக் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.