ETV Bharat / entertainment

Tamilarasan: தடைகளை தாண்டி வெளியானது விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்'

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த தமிழரசன்(Tamilarasan) திரைப்படம் இன்று வெளியானது.

author img

By

Published : Apr 22, 2023, 1:38 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர் என ஏறுமுகத்தில் இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் பாதி படங்கள் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. சில படங்கள் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது விஜய் ஆண்டனி இயக்கி நடிக்கும் பிச்சைக்காரன்-2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

மேலும், தமிழரசன் என்ற படத்திலும் நடித்துள்ளார். பாபு யோகேஸ்வரன் தமிழரசன் படத்தை இயக்கியுள்ளார்.
எஸ்.என்.எஸ். மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'தமிழரசன்' படத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு இன்று வெளியாகியுள்ளது. கடந்த 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் வெளியீட்டு தேதி தள்ளவைக்கப்பட்டு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழரசன் திரைப்படம் நேற்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் மீண்டும் பிரச்சனை காரணமாக வெளியாவதில் இழுபறி ஏற்பட்டது. ஒரு வழியாக அனைத்து பிரச்சனைகளும் முடிந்து தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இதே போன்று அருண் விஜய் நடித்துள்ள பார்டர் திரைப்படமும் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தற்போது வரை வெளியாகாமல் உள்ளது. இந்த நிலையில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தமிழரசன் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வாரம் நான்கு படங்கள் வெளியாகியுள்ள நிலையில் யாத்திசை, விமல் நடித்த 'தெய்வ மச்சான்' ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு வாரமும் குறைந்தது நான்கு படங்களாவது திரையரங்குகளில் வெளியாகிறது. ஆனால் திரையரங்குகளில் சென்று பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பதே உண்மை. அடுத்த வாரம் பொன்னியின் செல்வன்-2 வெளியாக உள்ளதால் இந்த வாரம் வெளியான படங்கள் அடுத்த சில நாட்களுக்கு திரையரங்குகளில் ஓடும் என்பதால் அப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு சற்று ஆறுதலை தரலாம்.

இதையும் படிங்க: விமல் நடித்த குலசாமி படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு - அப்போ எப்போது ரிலீஸ்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.