சென்னை: மூத்த சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டை பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார். எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி அஜித், விஜய் வரை அனைத்து நடிகர்களின் படங்களிலும் பணிபுரிந்து உள்ளார்.
இவர் வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள தனது சொந்த ஊரில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது உடல் நாளை சென்னை கொண்டு வரப்பட்டு ஸ்டன்ட் யூனியனில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு மறுபடியும் குடியாத்தம் எடுத்துச் செல்லப்பட உள்ளது. ஜூடோ ரத்னம் இந்திய சினிமாவின் 50 ஆண்டுகாலம் பணியாற்றியவர். ஒரு காலத்தில் இந்திய சினிமாவின் மோஸ்ட் வாண்டட் சண்டை பயிற்சியாளராக இருந்தவர்.
70, 80-களில் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டிப் பறந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன், ராஜ்குமார் என பலருக்கும் சண்டைப்பயிற்சி கற்றுக்கொடுத்தவர், இந்த ஜூடோ கே.கே.ரத்னம். ரஜினிகாந்துக்கு ஆஸ்தான சண்டைப் பயிற்சியாளர் இவர் தான். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் உடல் நாளை சென்னை கொண்டு வரப்பட்டு ஸ்டன்ட் யூனியனில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு மறுபடியும் குடியாத்தம் எடுத்துச் செல்லப்பட உள்ளது.
இதையும் படிங்க: Ayali webseries review: பெண்ணியம் போற்றும் 'அயலி'-க்கு குவியும் வாழ்த்து!