இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் புதிய பரிணாமத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு' . இந்தத் திரைப்படம் சிம்பு இதுவரைத் தோன்றாத பல பரிணாமங்களில் தோன்றியிருக்கும் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று(செப்.2) சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கோலாகலமாக வெளியிடப்பட்டது. ஏற்கெனவே சில நாட்களுக்கு முன்பு, இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருவதாகப் பரவிய செய்திகளை ட்ரெய்லரின் மூலம் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உறுதிசெய்துள்ளார்.
மூன்று பரிணாம காலகட்டங்களில் சிம்பு தோன்றும் காட்சிகள் ட்ரெய்லரின் இடம்பெற்றுள்ளன. டீன் ஏஜ், இளமைப் பருவம், முதிர்ந்த இளம்பருவம் எனப் பல்வேறு வயதுடையவராய் சிம்பு இந்தப் படத்தில் தோன்றிருக்கிறார். இதுவரை பார்க்காத எஸ்.டி.ஆரின் மாறுபட்ட உடல்மொழி, முதிர்ந்த நடிப்பு என அனைத்தும் ட்ரெய்லரில் மிளிர்கிறது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இந்தத் திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகனின் கதையிலிருந்து உருவாகியுள்ளது. ஏனெனில், அதற்கேற்ப உண்மைத் தன்மையும் இந்தப்படத்தில் தெரிகிறது. ட்ரெய்லரை வைத்துப்பார்க்கையில் இது நிச்சயம் தமிழ்சினிமாவின் ஒரு மறக்கமுடியாத கேங்ஸ்டர் திரைப்படமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.