இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, குஷ்பு என ஏராளமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசை அமைத்துள்ளார். தில் ராஜூ தயாரித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'வாரிசு' படத்தின் ட்ரெய்லர் அப்டேட் புத்தாண்டு அன்றே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மாலை 5 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
-
#VaaThalaivaa it’s time for #VarisuTrailer 🔥
— Sri Venkateswara Creations (@SVC_official) January 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Releasing Tomorrow at 5 PM on @SunTV YouTube channel 💥
See ‘U’ soon nanba 😁#VarisuGetsCleanU#Thalapathy @actorvijay sir @directorvamshi @MusicThaman @iamRashmika @7screenstudio @TSeries #Varisu #VarisuPongal pic.twitter.com/OAm0gBhV48
">#VaaThalaivaa it’s time for #VarisuTrailer 🔥
— Sri Venkateswara Creations (@SVC_official) January 3, 2023
Releasing Tomorrow at 5 PM on @SunTV YouTube channel 💥
See ‘U’ soon nanba 😁#VarisuGetsCleanU#Thalapathy @actorvijay sir @directorvamshi @MusicThaman @iamRashmika @7screenstudio @TSeries #Varisu #VarisuPongal pic.twitter.com/OAm0gBhV48#VaaThalaivaa it’s time for #VarisuTrailer 🔥
— Sri Venkateswara Creations (@SVC_official) January 3, 2023
Releasing Tomorrow at 5 PM on @SunTV YouTube channel 💥
See ‘U’ soon nanba 😁#VarisuGetsCleanU#Thalapathy @actorvijay sir @directorvamshi @MusicThaman @iamRashmika @7screenstudio @TSeries #Varisu #VarisuPongal pic.twitter.com/OAm0gBhV48
கடந்த டிச. 31ஆம் தேதி அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் வாரிசு படத்தின் ட்ரெய்லர் அப்டேட் குறித்து ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: வாரிசு, துணிவு படங்களுக்கு சென்சார் ரெடி - வாரிசை விட துணிவுக்கு அதிக கட்!