பிரபல திரைப்பட கலை இயக்குநர் சுனில் பாபு (50) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
பிரபல கலை இயக்குநரான சாபு சிரிலிடம் பணியாற்றி வந்த இவர், அதன் பின் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் 100 படங்களுக்கும் மேலாக கலை இயக்குநராகப் பணியாற்றியவர். மலையாளத்தில் பிரேமம், பெங்களூர் டேஸ், நோட் புக், அனந்த பத்ரம் போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். இதில் அனந்த பத்ரம் படத்திற்காக சிறந்த கலை இயக்குநருக்கான கேரள மாநில விருதைப் பெற்றார்.
மேலும் இந்தியில் எம்.எஸ். தோனி, கஜினி, லக்ஷ்யா மற்றும் ஸ்பெஷல் சௌபீஸ் போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். மேலும் தெலுங்கில் பான் இந்தியா படமாக வெளியான 'சீதா ராமம்' படத்தில் பணியாற்றியுள்ளார். இறுதியாக, தமிழில் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படத்தில் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவரது மறைவிற்கு திரையுலக நட்சத்திரங்கள், ரசிகர்கள் எனப் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இதையும் படிங்க: Rajinikanth:'நண்பனை இழந்துவிட்டேன்' - மன்ற நிர்வாகி இறுதிச்சடங்கில் ரஜினிகாந்த் உருக்கம்