அமுதவாணன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார், ஆடுகளம் நரேன், பாவனா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் வி3. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் நேற்று (ஜன.06) திரையரங்குகளில் வெளியானது. முன்னதாக இப்படம் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது.
படத்தை பார்த்த அனைவரும் தற்போது சூழலுக்கு மிகவும் தேவையான திரைப்படம் என்று பாராட்டியுள்ளனர். படத்தில் பாலியல் குற்றங்களுக்கு தீர்வாக இயக்குநர் சொல்லியுள்ள காரணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாலியல் குற்றங்களை குறைக்க இந்தியாவில் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என்றும் இயக்குநர் சொல்லியுள்ளார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இப்படத்தில் நிர்பயா பாலியல் வன்கொடுமை, பொள்ளாச்சி பிரச்னை போன்றவற்றை பற்றி திரைக்கதையில் சொன்ன விஷயமும் பாராட்ட வைத்துள்ளதாக படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சோனியா அகர்வால் நடிக்கும் ஹாரர் திரைப்படத்தின் படபிடிப்பு பூஜையுடன் தொடங்கியது