ETV Bharat / entertainment

வடிவேலு நடிப்பில் "நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்" ட்ரெய்லர் வெளியீடு! - The song Appatta was released

'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வடிவேலு நடிப்பில் "நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்" ட்ரெய்லர் வெளியீடு

author img

By

Published : Dec 1, 2022, 7:29 PM IST

சென்னை: சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்து வரும் திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் வைகை புயல் வடிவேலு நடிக்கும் படம் என்பதால் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து பிரபுதேவா நடனம் அமைத்திருந்த 'அப்பத்தா' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.

அதனை தொடர்ந்து வெளியான பணக்காரன் என்ற மற்றொரு பாடலும் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவித்து வருகிறது. இப்பாடலையும் வடிவேலு பாடியுள்ளார்.

'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ' திரைப்படம் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி இன்று‌ இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் #NaaiSekarReturnsTrailer #Vadivelu #Suraaj என்ற ஹேஸ்டேக்குகளை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க:'அவதார் 2' தமிழகத்தில் வெளியாவதில் சிக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.