ETV Bharat / entertainment

அரசியல் கட்சிகளை நேரடியாக சாடி சர்ச்சையில் சிக்கிய "உருட்டு உருட்டு" பாடல்! - சமுத்திரக்கனி படம்

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள "பப்ளிக்" படத்தின் உருட்டு உருட்டு பாடல் தற்போதைய அரசியல் கட்சிகளை நேரடியாக சாடியுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

public
பப்ளிக்
author img

By

Published : Mar 9, 2023, 4:36 PM IST

சென்னை: சமுத்திரக்கனி தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமின்றி குணசித்திரம் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். மொழி கடந்து சென்று வில்லன் வேடமிட்டவர், தமிழில் கதை நாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது கே.ஆர் சினிமாஸ் தயாரிப்பில் ரா.பரமன் இயக்கத்தில் "பப்ளிக்" என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் சமுத்திரக்கனி உடன் இணைந்து காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அரசியல் கதைக்களம் கொண்டு விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக்கள் முன்பே வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தின. தற்போது இன்னொரு பிரச்சினையையும் இப்படம் எதிர்கொண்டு உள்ளது. படத்தில் யுகபாரதி எழுதியுள்ள 'உருட்டு உருட்டு' என்ற பாடல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பாடல் அனைத்து வித அரசியல் கட்சிகளையும் பாரபட்சம் இல்லாமல் விமர்சனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் உள்ள சில வரிகள் இன்றைய அரசியல் சூழ்நிலையை நேரிடையாக தாக்குவது போல் உள்ளது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதில் "சுகமா கால நக்கி பொழப்பாய்ங்க" என அதிமுகவை நேரடியாக தாக்குவது போல் வரிகள் உள்ளதாக கூறப்படுகிறது.

"மகனை சி.எம் ஆக்க துடிப்பாய்க" என திமுகவை தாக்குவது போலும், "மதத்தை முன்ன வச்சு மக்களையும் சிதைச்சு, நாட்டை பங்கு பிரிப்பாங்க" என பாஜகவையும் நேரிடையாக விமர்சிக்கும் வகையில் வரிகள் உள்ளதாக நெட்டிசன்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதேபோல் பாடலின் இறுதியில் மோடி டிவியில் பேசிக் கொண்டிருக்க, பெரியார், அண்ணாதுரை, காந்தி, சேகுவேரா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் டீக்கடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது போன்ற காட்சி அரசியல் தலைவர்களை அவமரியாதை செய்வது போன்று உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

Uruttu Uruttu song
"உருட்டு உருட்டு" பாடல்

இப்பாடல் குறித்து இணையத்தில் கருத்து தெரிவித்துள்ள பலரும் அரசியல் கட்சிகளை நேரடியாக விமர்சனம் செய்து இருப்பதால் படத்தில் இடம் பெறுவது சந்தேகம் தான் என்றும், விரைவில் இந்த பாடல் தடை செய்யப்படலாம் என்றும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

எதாவது ஒரு கட்சியை மட்டும் விமர்சனம் செய்து இருந்தால் தப்பிக்கலாம் என்றும் அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்து உள்ளதால் உருட்டு உருட்டு பாடல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஸ்னீக்பீக் வீடியோக்களில் ஏகப்பட்ட சர்ச்சையான காட்சிகள் இருந்த நிலையில், தற்போது பாடலிலும் சர்ச்சையான வரிகள் இருப்பதால் படம் வெளியாகுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Uruttu Uruttu song is a controversy that has directly hit the current political parties
தற்போதைய அரசியல் கட்சிகளை நேரடியாக சாடியுள்ள "உருட்டு உருட்டு" பாடல்

ஒரு அரசியல் கட்சியை சீண்டினாலே பஞ்சாயத்து ஆகும் இன்றைய சூழலில் எல்லா கட்சிகளையும் வம்புக்கு இழுத்துள்ளது பப்ளிக் படக் குழுவினருக்கு பேராபத்தை ஏற்படுத்தும் விஷயமாக பார்க்கப்படுவதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: "கூந்தல் தானம்": நெல்லையில் புற்றுநோயாளிகளுக்கு அரசு பெண் ஊழியர்கள் தானம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.