ETV Bharat / entertainment

என்ன சொல்றீங்க லியோவில் இருந்து விலகலா? - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா! - இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ

காஷ்மீரில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், குளிரை தாங்க முடியாததால் நடிகை த்ரிஷா, டெல்லியில் தங்கும் விடுதியில் தங்கி இருந்தார். பின்னர் மீண்டும் லியோ படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

என்ன சொல்றீங்க லியோவில் இருந்து விலகலா?- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா!

author img

By

Published : Feb 8, 2023, 5:59 PM IST

சென்னை: இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடித்துவரும் திரைப்படம், லியோ. இப்படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்கிறார். இவர் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஜய் உடன் ஜோடி சேர்கிறார். இதனால் நடிகை த்ரிஷா மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மூணாறிலும் நடைபெற்ற நிலையில், தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது.

இதற்காக கடந்த மாதம் படக்குழுவினர் அனைவரும் தனி விமானம் மூலம் காஷ்மீருக்கு பறந்து சென்றனர். அப்போது நடிகை த்ரிஷாவும் உடன் சென்றிருந்தார். அதன்‌ வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது‌. காஷ்மீரில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட மூன்றே நாட்களில், நடிகை த்ரிஷா காஷ்மீரில் இருந்து கிளம்பியதாக செய்திகள் வெளியாகின.

அவர் எதனால் உடனே அங்கிருந்து கிளம்பினார்? லோகேஷ் உடன் சண்டையா? என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவத் தொடங்கின. ஆனால், இது உண்மையில்லை என்பதை நடிகை த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் சமீபத்திய பேட்டி மூலம் உறுதிப்படுத்தினார். ஆனாலும், நெட்டிசன்கள் இதனை நம்ப மறுத்து ஏராளமான கட்டுக்கதைகளை பரப்பி வந்தனர். இதனிடையே த்ரிஷா ஏன் டெல்லி வந்தார் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

காஷ்மீரில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறதாம். அந்த குளிரை தாங்க முடியாததால் நடிகை த்ரிஷா, டெல்லிக்கு வந்து அங்குள்ள தங்கும் விடுதியில் தங்கி இருந்தாராம். இதையடுத்து தற்போது மீண்டும் காஷ்மீருக்கு கிளம்பிச் சென்றுள்ளார் த்ரிஷா. அவர் விமானத்தில் சென்றபோது காஷ்மீர் முழுவதும் பனியால் சூழப்பட்டு இருக்கும் காட்சியை விமானத்தில் இருந்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த ஒரே பதிவு மூலம் 'லியோ' படத்தில் இருந்து தான் விலகியதாக பரவிய வதந்திக்கு த்ரிஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதனிடையே 'லியோ' படக்குழுவினர் காஷ்மீரில் 2 மாதங்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால், அங்கு தற்போது நிலவிவரும் அதிக பனிப்பொழிவின் காரணமாக சீக்கிரமாக படப்பிடிப்பை முடித்துக்கொண்டு மீண்டும் சென்னை திரும்பும் ஐடியாவில் உள்ள‌ லோகேஷ் கனகராஜ் வேகவேகமாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இதனிடையே காஷ்மீர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இயக்குநர் மிஷ்கின் இன்னும் சில தினங்களில் காஷ்மீர் பறக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஓடிடியில் வெளியானது அஜித்தின் துணிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.